Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை! 10 ரூபாய் செலுத்தினால் போதும் உடனே மஞ்சப்பை!

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பல வருட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனாலும்கூட பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டது.

ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக பூமியின் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. பூமியில் புதைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவு எளிதில் மக்கி போவதில்லை.

ஒரு பிளாஸ்டிக் பொருளை பூமிக்கடியில் புதைத்து வைத்து அந்த பொருளை சுமார் 10 பத்தாண்டுகளுக்குப் பிறகு எடுத்துப் பார்த்தாலும் அந்த பொருள் மக்கிப் போகாத சூழ்நிலை தான் இருக்கும்.

இப்படி மக்காத தன்மை கொண்ட பொருளை பூமியில் புதைக்கப்படுவதால் பூமிக்கும், விவசாயத்திற்கும், எந்தவிதமான பலனுமில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆகவேதான் மத்திய-மாநில அரசுகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

அந்த விதத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்து வைத்தார்.

இதனை தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை அமைச்சர் மெய்யநாதன் இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தினால் துணியாலான மஞ்சள் பை வழங்கும். அதோடு ஆய்வுக்காக புதிய 25 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்.

அது ஒரு சோதனை முயற்சியாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியாசாகு ஆரம்பித்து வைத்தார்.

வியாபாரிகள், பொதுமக்கள், உள்ளிட்டோர் அதிகளவில் வந்து செல்லும் சந்தையில் இந்த வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மீண்டும் மஞ்சப்பை பசுமை தமிழகம் இயக்கம் முதன்முறையாக என்ற சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கை பாதுகாப்பு முன்னெடுப்புகளை தமிழக அரசு ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு உலக சுற்றுச்சூழல் நாளில் நமக்கு இருப்பதே ஒரே உலகம் என்பதை மனதில் கொண்டு அனைத்து வகையிலும் அதனை பாதுகாக்க பாடுபடுவோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

Exit mobile version