நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே தினத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதாவது தடுப்பூசி போடுதல் அதிகப்படுத்துதல், பரிசோதனை மையத்தை அதிகப்படுத்துதல் மற்றும் இரவு நேர ஊரடங்கு, முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய மாநில அரசுகள்.
அதேசமயம் இந்த தொடரின் வேகத்தை பார்த்து பொதுமக்கள் எல்லோரும் வெகுவாக அச்சத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொதுமக்கள் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றினால் நிச்சயம் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்று மத்திய மாநில அரசுகள் உறுதிபட தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய விஷயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வேலையை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு இதுவரையில் தடுப்பு ஊசி போட்டதை கணக்கிடுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது ஆனால் அதனை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு இருக்கிறோம் என்ற விதத்தில் கணக்கிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இதுவரையில் மிகக் குறைந்த அளவிலான மக்கள் தொகையின் அருகே இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசிடம் சரியான கொள்கை மற்றும் நடவடிக்கை இருந்தால் இன்னும் சிறப்பாகவும் நிறைவாகவும் இதனை செயல்படுத்த இயலும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமை பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.