Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!

‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!

இந்திய தேசத்திற்கு ஊக்கம் தரக்கூடிய பாரத் மாதாகீ ஜெய் கோஷத்தை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.

நாட்டின் பயங்கரவாதம் மற்றும் உணர்ச்சிகரமான கருத்துகளுக்கு உதவும் ரீதியாக சொல்லப்படுவதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் சிறப்பாக விளங்கிய ஜவஹர்லால் நேரு அவர்களின் கடந்த கால வரலாற்றை படிக்க விரும்பாதவர்கள் அவரது புகழையும், பெயரையும் சிதைத்து தவறாக கட்டமைப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய நாட்டிற்காக எழுப்பப்பட்ட வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத் மாதாகீ ஜெய் போன்ற கோஷங்கள் தற்போது ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்காவும், அரசியல் கட்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வரலாற்று கோஷங்கள் சுருக்கப்பட்டுள்ளதையும் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார் என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது. இந்த செய்தியை காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version