Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!!

#image_title

மயில் சாமியை கேட்டதாக சொல் மனோ பாலா!! உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் இளவரசு!!

நடிகரும் இயக்குநருமான பிரபல நடிகர் மனோ பாலா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

69 வயதாகும் நடிகர்.மனோ பாலா அவர்கள் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்க்காக மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்த்து வந்த நடிகர் மனோ பாலாவிற்கு அங்கு அவருக்கு அளித்த சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இதனால் அவர் நேற்று அவர் காலமானார்.

நடிகர் மனோ பாலா காலமான செய்தி தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு நடிகர் விஜய், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் பல நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் நடிகர் இளவரசு நடிகர் மனோ பாலா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் இளவரசு தனது முகநூல்(Facebook) பக்கத்தின் சுயவிவரப் படத்தை மாற்றி நடிகர் மனோ பாலா அவர்களின் புகைப்படத்தை சுயவிவரப் படமாக வைத்துள்ளார். மேலும் நடிகர் இளவரசு, ” அண்ணன் மயில்சாமி அவர்களை கேட்டதாக சொல் மனோ பாலா” என்று உருக்கமாக கூறியுள்ளார். நடிகர் மயில்சாமி கடந்த பிப்பரவரி மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version