அதிகாரத்தின் குரலாக திமுக இருக்கிறது! தமிழக மக்கள்!

0
155

மிக அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக புதிய கொள்கைத் திட்டம் வகுக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் ஐடி பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றார்.கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றையதினம் ஆய்வு செய்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல்முறையாக கோவை மாவட்டத்திற்கு வந்திருக்கின்றேன். கோவை மாவட்டத்தில் 114 கோடியில் இரண்டாவது இதன் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது அவற்றை ஆய்வு செய்தேன் என்று தெரிவித்திருக்கின்றார்.அதோடு தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்கி அதிக அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுப்பதற்கான திட்டங்கள் வகுத்து அதனை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். தற்சமயம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது இதனை கருத்தில் வைத்து தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தி தமிழ் நாட்டிலேயே அதிக அளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லாமல் இளைஞர்கள் அந்தந்த பகுதியிலேயே வேலை செய்யும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேற்றிக் கொண்டு வரப்படும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் கடந்த 10 வருடங்களில் கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கு சென்று விட்டன. ஆகவே எதிர்காலத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய கொள்கை திட்டங்களை வகுக்க இருக்கிறது தமிழக அரசு என்று தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்தி தமிழகத்திற்கு மிக அதிக முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் அரசாங்கம் செயல்பட்டது. ஆனால் இது எதையுமே நடக்காதது போல அமைச்சர் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கையாக இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பொதுமக்கள் என்னதான் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டாலும் அதன்மூலமாக ஏகப்பட்ட முதலீடுகள் இந்தியாவில் செய்யப்பட்டு இருந்தாலும் ஆட்சிக்கு வந்து விட்டோம் என்ற அதிகாரத்தின் குரலாக திமுகவின் குரல் தற்சமயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பேசப்படுகிறது.