தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வளம் வந்தவர் மனோபாலா அவர்கள். இறைவனடி சேர்ந்த பொழுதும் ரசிகர்களின் மனதினல் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
1979 ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் உடைய இயக்கத்தில் வெளியான புதிய வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா அவர்கள் பணியாற்றியுள்ளார். பாரதிராஜா உடனான முதல் சந்திப்பு குறித்து சுவாரசியமான தகவல்களை மனோபாலா அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக மனோபாலாவை நடிகர் கமலஹாசன் அவர்கள்தான் பரிந்துரை செய்ததன் பேரில் இயக்குனர் பாரதிராஜா அவர்களும் ஏற்றுக்கொண்டு முதல் நாள் ஒரு படம் குறித்த விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த விவாதம் முடிந்து வெளியே வந்த பாரதிராஜா மற்றும் மனோபாலா இருவரும் பேசிக் கொள்ளும் போது பாரதிராஜா அவர்கள், அந்த படத்தின் கதையை முதலில் கேளுங்கள் என மனோபாலாவிடம் கூற கதையைக் கேட்ட மனோபாலா அவர்கள் பாரதிராஜாவிடம் சென்று இந்த கதையை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதுடன் மட்டுமின்றி இந்த படம் கண்டிப்பாக ஓடாது என கூறியிருக்கிறார்.
வந்த முதல் நாளே இப்படி ஒரு வார்த்தை சொல்லி இருப்பது பாரதிராஜா அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும் மனோபாலாவின் உடைய அந்த தைரியம் பாரதிராஜாவுக்கு பிடித்து விட்டதாக பேட்டி ஒன்றில் மனோபாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.