கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!
சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழே தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்க பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே நகர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆர்.கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியிலேயே தங்கி இருக்கும் பொட்டு என்கிற நபர் என்பதும் 65 வயது மதிக்கத்தக்க நபர் என்பதால் தன்னை தானே கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை துரிதப்படுத்தி உள்ளனர்.