மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்!
திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான உண்மையாய உரைத்தது போல இருந்தது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்பவர்க்கு எவ்வாறு முதல் நெஞ்சுவலி ஏற்படும்,அவ்வாறு ஏற்பட்ட போது உயிர்போகும் அபலம் ஏற்படும்? என கேட்டார்.கொரோனா என்பது சாதாரண காய்ச்சல் நோய் தான்.அதை ஏன் பெரிதாக மக்களிடம் விமர்சித்து பயம் காட்டி வருகிறீர்கள்.கொரோனா தடுப்பூசியை யார் உங்களை போட சொல்லி சொன்னது என அரசாங்கத்தையே எதிர்த்து பல கேள்விகளை சரமாரியாக கேட்டார்.அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் அனைவரின் மனதில் இருந்தது தான்.
ஆனால் மருத்துவர்கள் விவேக் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் நெஞ்சுவலி வரவில்லை.இவருக்கு இதயக்குழாயில் அடைப்பு ஒன்று இருந்தது.அதற்கு நாங்கள் எக்மோர் சிகிச்சை அளித்தோம்.ஆனால் அந்த சிகிச்சை விவேக்கிற்கு பயனளிக்கவில்லை என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.ஆனால்,மன்சூர் அலிகானோ ஆணித்தரமாக அவர் மருத்துவர்களுக்கு எதிராக அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என தெரிவித்தார்.
இவர் இவ்வாறு கூறுவதால் மக்கள் தடுப்பூசி போட முன் வர மாட்டார்கள்,இவர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகிறார் என டிஜிபி அலுவலகத்தில் கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் புகார் அளித்தார்.அதனால் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.வழக்கு பதிவு போட்டதால் முன் ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவானது கடந்த 21-ம் தேதி முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.மன்சூர் அலிக்கு எதிர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம்,மன்சூர் அலிகான் மக்களுக்கு அச்சம் தரும் வகையில் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதால் இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கேட்டார்.
இதனையடுத்து நீதிபது மன்சூர் அலிக்கானின் முன்ஜாமீன் மனுவின் முதல் தகவல் சரியாக குறிப்பிடவில்லை எனக் கூறி,புதிய மனுவை சமர்பிக்குமாறு நீதிபது உத்தரவிட்டார்.அதனையடுத்து மன்சூர் அலிக்கானின் தற்போதைய புதிய மனுவில் கூறியிருப்பது,வடபழனி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கானது இன்று நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மன்சூர் அலிகான் தரப்பை கேட்டறிந்த நீதிபதி,இனி இதுபோன்ற வதந்திகளை மக்களிடம் பரப்பக் கூடாது என கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் தமிழக சுகாதாரத்துறைக்கு வழக்க வேண்டும் என கூறியிருந்தார்.இவ்வாறு பல நிபந்தனைகளுடன் மன்சூர் அலிக்கு முன் ஜாமீன் வழங்கியது.