Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்…. என்ன காரணம் தெரியுமா..??

Mansoor Alikhan who was discharged in an emergency

Mansoor Alikhan who was discharged in an emergency

அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்…. என்ன காரணம் தெரியுமா..??

நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் இறுதி நாள் அன்று திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்ட மன்சூர் அலிகானுக்கு அங்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், வேலூர் குடியாத்தம் பகுதியில் தனக்கு கட்டாயப்படுத்தி ஜூஸ் மற்றும் மோர் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னரே உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஜூஸில் விஷம் கலந்து கொடுத்திருப்பார்களோ என்றும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மன்சூர் அலிகான் நேற்று இரவு அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு இன்னும் உடல்நிலை முழுமையாக சரியாகாததால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க கூறியுள்ளனர்.

ஆனால் மன்சூர் அலிகான் ஓய்வெடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தேர்தல் நடைபெறுவதால் உடனடியாக வேலூருக்கு செல்ல வேண்டுமென கூறி மருத்துவமனையில் இருந்து தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவருக்கு உடலில் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் முழுமையாக குணமடையாமல் அவர் இப்படி செல்வது சரியில்லை என மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.

Exit mobile version