Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! 

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் புயலாளாக வலு பெற்றது.

இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.அதனால் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறையன்பு தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.அதில் செங்கல்பட்டு, சென்னை ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் பேருந்துக்குள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் தற்போது வரை 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் காற்று மற்றும் மழையின் வேகம் மாறுபட்டால் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து பயணிகள் எந்த விமானம் செல்கின்றது என அறிந்து கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version