ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது!
ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டம்மன்ற தேர்தல் வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுகயிடையே அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர பல வகைகளில் இலவசங்கள் கொடுக்கப்படும்.இதை தடுக்கும் விதமாகதான் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து திருப்பூர் காங்கேயம் அருகே ரூ.5000 ற்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பரிசு பொருட்களில் கம்பளி போர்வை,எவர்சில்வர் தட்டு,ஒரு சேலை என 15 ற்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன.இவற்றை அனைத்தயும் பறக்கும் படை கைப்பற்றியது.இதனையடுத்து மக்களிடம் ஓட்டுக்களை நேர்மையான முறையில் வாங்க வேண்டும்.இந்த மாதிரி பரிசு பொருட்களை கொடுத்து மக்களை கவர நினைக்க கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களும் இந்த மாதிரி பரிசு பொருட்களை பெற்றுக்கொண்டு தங்களது ஓட்டுக்களை விற்க கூடாது.ஓட்டு என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.தோல்வி அடைந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்தார்கள் என்பது பலரால் பேசப்படுகிறது.