Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடன் தொல்லையால் அசிஸ்டன்ட் மேனேஜர் கடலில் குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை

Dead

Dead

கடன் தொல்லையால் அசிஸ்டன்ட் மேனேஜர் கடலில் குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதி சார்ந்தவர் பெருமாள் மகன் முத்துசாமி (வயது 31). இவர் கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன வருத்தத்துடன் இருந்த முத்துசாமியை அவரது உறவினர்கள் கேட்ட பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வாக்கிங் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடி கிடைக்காததால் அவரது உறவினர்கள் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கோட்டகுப்பம் கடற்கரை அருகே அவரது உடல் கரை ஒதுங்கியது.

மேலும் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version