Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

#image_title

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை, அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதில், முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலதாமதமாக வரி செலுத்துவோரிடம், 2 சதவீதம் தனி வட்டி வசூலிக்கப்படும். இந்த 2022 – -23ம் நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால், தனி வட்டி இல்லாமல் வரி செலுத்துவதற்கு, கடந்த ஜன-12ஆம் தேதி வரை கால அவகாசம் மாநகராட்சி சார்பில்  வழங்கப்பட்டது.

இருப்பினும் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். சொத்து வரி செலுத்தாதவர்கள் பட்டியல், மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி போன்ற வரிகளை செலுத்த மார்ச் 31ஆம் தேதியானது கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. 

இதன்படி மார்ச் 31ஆம் தேதிக்குள் வரியை செலுத்தாதவர்களுக்கு அபராதமாக 2% விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்கள் ஆக வரி செலுத்தாமல் உள்ள இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version