மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய குழுவின் முதல் பிரிவு நேற்றைய தினம் டோக்கியோ சென்றடைந்தது. இந்த வருடத்திற்கான பாரா ஒலிம்பிக் ஆரம்ப விழா அணிவகுப்பில் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாரியப்பன் தங்கவேல் தேசிய கொடியை ஏந்தி செல்ல இருக்கிறார்.
கோடைகால ஒலிம்பிக் அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டிகளையும் ஜப்பான் நாடு நடத்த இருக்கிறது. அந்த நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரையில் நடைபெறும் போட்டிகளில் பல நாடுகளிலிருந்து சுமார் 4 ஆயிரத்து 400 பேர் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து 14 பெண்கள் உட்பட 54 பேர் கொண்ட அணி பங்கேற்க இருக்கிறது இந்திய அணிக்கு தலைமை ஏற்கும் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட அணியின் முதல் குழு நேற்று டெல்லியில் இருந்து டோக்கியோவிற்கு புறப்பட்டது.
முன்னதாக விமான நிலையத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மாரியப்பன் மீண்டும் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என தெரிவித்தார். ஆரம்ப விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மாரியப்பன் என்ற பெருமையைப் பெறும் முதல் தமிழக வீரர் என்று சொல்லப்படுகிறது. இவர் சென்ற ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் என சொல்லப்படுகிறது.
டோக்கியோவிற்கு செல்வதற்கு முன்னர் இந்தியக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.