Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்கழி மாதத்தில் இவ்வளவு நன்மைகளா?

மார்கழி மாதம் கடவுக்கான மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். இந்த மாதத்தில் நோன்பு இருப்பது மிகவும் சிறந்தது. மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்துத் தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதம் இருந்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதமிருக்க வேண்டும். துளசி தீர்த்தம் தவிர வேறு எதையும் உண்ணவும், பருகவும் கூடாது. இரவு முழுவதும் சோர்வில்லாமல் கண் விழித்து, பரந்தாமனைப் போற்றும் பக்திப் பாடல்களைப் பாடலாம். மறுநாள் துவாதசி அன்று விஷ்ணுவை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

Exit mobile version