அரசியல் உள் நோக்கத்திற்காக பாஜகவிடம் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக அந்த கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி கலவரத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் நாடு முழுவதும் இதுவரை நடத்திய ராத்திரிகளில் தொடர்ச்சியாக கவனித்து பார்த்தால் எல்லோருக்கும் பாஜகவின் நோக்கம் என்னவென்று புரிந்து விடும் அவர்கள் செல்லும் வழியெங்கும் மக்களின் ரத்தமும் சதைகளும் கொட்டி கிடந்தது வரலாறு பதிவு செய்திருக்கின்றது.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பாஜகவினர் குண்டு வைத்துவிட்டு திருப்பூரில் தான் சொந்த கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மதவாத வழியாக கொலை செய்யப்பட்டார்கள் என்று கலவரம் செய்ய முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது எனவும், ராமநாதபுரத்தில் தனிநபர்களுக்கு இடையிலான மோதலை மதரீதியான மோதலாக கற்பனை செய்து வன்முறையைத் தூண்ட முயற்சி செய்தது பாஜக, பாஜக நிர்வாகிகள் அவர்கள் வீட்டிலேயே குண்டு எறிந்து சிறுபான்மையின மக்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று பொய்யான பழியைக் மற்ற இயக்கத்தின் மீது திணித்து வந்திருக்கின்றது.
கொரோனா காலத்தில் 100 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் வடபகுதியில் இருந்து தென் பகுதி வரை கட்டுப்பாடுகள் இருக்கும் இந்த நேரத்தில், யாத்திரை நடத்த அனுமதிப்பது அவர்களின் விஷம் கலந்த பிரச்சாரத்தை பரப்புவதோடு கொடிய நோயையும் அதன் மூலமாக பரப்புவதற்கு ஒரு வழியாக அமைந்துவிடும்.
ஆகவே நோய் பேரிடர் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி கலவர அரசியலின் நோக்கத்திற்காக நடக்கவிருக்கும் இந்த வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றது.