திருமணத்தில் ஏற்படவிருக்கும் திருப்புமுனை! அதிமுகவை தக்க வைப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

0
122

தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமணம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற இருக்கின்றது. அந்த திருமணத்திற்கு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிமுக நிர்வாகிகள் இடையே தொலைபேசி மூலமாக உரையாற்றி அந்த ஆடியோவை தொடர்ச்சியாக வெளியிட்டு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் சசிகலா. இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக சசிகலாவுடன் உரையாற்றிய நபர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் உத்தரவிட்டு வருகிறார்கள்.

அதன்பிறகு ஓபிஎஸ் மொத்தம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு சசிகலா அவர்களை பன்னீர்செல்வம் எதிர்த்து வெளிப்படையாக பேசி இருக்கின்றார். அதன் பிறகு தான் சசிகலாவின் ஆடியோ வெளியாகவில்லை டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் கைபற்ற சசிகலா முன்னெடுக்கும் முயற்சி தொடர்பாக மற்றும் அவருக்கு எதிராக ஒரு சில புகார்களை தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் கொடநாடு சம்பவம் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு இடையில் சசிகலா இந்த சமயத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்வார்? அவர் தெரிவித்தபடி எப்போது தொண்டர்களை சந்திப்பார் என்று கேள்வி அவருடைய ஆதரவாளர்களுக்கு இடையில் எழுந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதிக்கு பின்னர் சசிகலா தன்னுடைய அரசியல் ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரை சார்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி அவர்களுக்கும், சென்ற வருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கின்ற கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது இந்த திருமணத்திற்கு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே அன்றிலிருந்து சசிகலாவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு டிடிவி தினகரன் பெரிய அளவில் கட்சி ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், வெளியே தலை காட்டவில்லை. சிறிது தினங்கள் ஒதுங்கி இரு என்று சசிகலாவை அவருக்கு அறிவுரை கூறியதாகவும். அதனால் திருமண வேலைகளில் ஈடுபட்டதால் கட்சி பணிகளில் மிக தீவிரமாக அவர் இறங்கவில்லை எனவும், இரண்டு கருத்துக்கள் உலாவிக் கொண்டு இருக்கின்றன. ஆகவே செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதிக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மிகத் தீவிரமாக இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.