Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

Marriage made by parents! The shocking incident that the girl did with her boyfriend!

Marriage made by parents! The shocking incident that the girl did with her boyfriend!

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

இப்போது உள்ள பிள்ளைகள் அவர்களுக்கு துணையை தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அவர்கள் போக்கில் விட்டால் நன்றாக இருக்குமா? என யோசித்து அவர்களை சேர்த்து வைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள். நாமும் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் நம் இஸ்டத்திற்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்கள் வாழ்கை நன்றாக இருக்குமா? என்பதை யோசித்து செயல்பட வேண்டும்.

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சப்பா கனவி. அதே கிராமத்தில் வசித்து வந்தவர் ஜக்குபாய். இந்த நிலையில் பஞ்சப்பாவும், ஜக்குபாயும் காதலித்து வந்தனர்.

ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜக்குபாயின் பெற்றோர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜக்குபாயை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய ஜக்குபாய், அங்கு பஞ்சப்பாவை சந்தித்து பேசினார். பின்னர் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மாந்தோப்புக்கு சென்று 2 பேரும் அங்கு ஒரு மா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுபற்றி அறிந்த சவதத்தி போலீசார் சம்பவ இடத்திற்குசென்று பஞ்சப்பா, ஜக்குபாயின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வேறொருவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் மனம் உடைந்த ஜக்குபாய், தனது காதலன் பஞ்சப்பாவுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version