Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திரௌபதி பட கதாநாயகிக்கு நடுக்கடலில் நடந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

Marriage to Draupadi heroine in the middle of the sea! Photo goes viral!

Marriage to Draupadi heroine in the middle of the sea! Photo goes viral!

திரௌபதி பட கதாநாயகிக்கு நடுக்கடலில் நடந்த திருமணம்! வைரலாகும் புகைப்படம்!

திரௌபதி படம் சாதி சார்ந்த வகையில் வெளி வந்தாலும் அதிக படியான மக்கள் பார்த்தனர்.அந்த திரௌபதி என்னும் படத்தின் கதாநாயகி தான் அப்படத்திற்கு பெரும் கைதாயாகவே இருந்தார்.அப்படம் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் என்வர் இயக்கினார்.இப்படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியானது.இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்திருந்தார்.கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.இந்த படத்தில் கதாநாயகியான ஷீலா முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொடரில் நடித்து வந்தார்.

அதன்பின் அந்த தொடரை விட்டு வெளியேறி படங்களில் நடிக்க தொடங்கினார்.அதுமட்டுமின்றி டூ லெட் படத்திலும் ஷீலா நடித்துள்ளார்.நன்றான கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.தற்போது தேர்தல் நெருங்கி வந்த நேரத்தில் மண்டேலா என்ற யோகி பாபுவின் படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.அப்படத்திலும் ஷீலா நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்தது.இதற்கிடையே ஷீலாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி பரவி வருகிறது.

அப்புகைப்படத்தில் நடுக்கடலில் ஒருவருடன் திருமணம் செய்தது போல மாலையுடன் இருக்கிறார்.இவருக்கு சில ஆண்டுகள் முன்பாகவே திருமணம் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.அதுவும் இவர் காதலித்து திருமணம் செய்ததாகவும் கூறுகின்றனர்.இவரது கணவர் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் ஷோ வில் பங்கேற்ற சோழர் என்பவர் என்று தெரிய வந்துள்ளது.மேலும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் ஷீலா திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.தற்போது சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படம் அதிக அளவு வைரலகியுள்ளது.

Exit mobile version