இனி பிரபஞ்ச அழகி போட்டியில் இவர்களும் பங்கேற்க அனுமதி
இனி நடக்கவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் திருமணமான பெண்களும் பங்கேற்கலாம் என போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. சர்வதேச அழகிப்போட்டியான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வரும் 2023-ஆம் ஆண்டு முதல் தாய்மார்கள் மற்றும் திருமணமான பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
72-வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியானது அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியின் விதிமுறைகளின் படி திருமணமாகாத பெண்கள் மற்றும் 18 முதல் 28 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லாத பெண்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்கஅனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தாண்டு முதல் திருமணமானபெண்கள் மற்றும் தாய்மார்களும் இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கலாம் என இந்த அழகி போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகள் அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்க கூடாது என தாங்கள் நம்புவதாக அந்த அமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.