Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாமக்கல் அருகே திருமணம் செய்த கல்லூரி மாணவி காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்!

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மாரப்பம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சுரேஷ், இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

சுரேஷின் அக்கா கருந்தேவபாளையத்தில் வசித்து வருகிறார் இங்கே சுரேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் வசித்து வரும் லோகநாதன் என்பவரின் மகன் புனிதமணி என்பவருடன் பழக்கம் உண்டானது. மனிதமணி கந்தம்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் கலைக்கல்லூரியில் 3ம் வருடம் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், நேற்று வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு மலையடிவாரத்திலுள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு நல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இதனை தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி சமாதானம் செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவி புனிமணியை சுரேஷ் குடும்பத்துடன் அனுப்பி வைத்தனர்.

Exit mobile version