Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

#image_title

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை – தமிழக அரசு வேலை

நிறுவனம் – மருதமலை முருகன் கோயில்

பணி – அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் – மொத்தம் 02

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 முதல் 45 வயதுக்குள் இருக்கும் நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மாத ஊதியம்

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

*நேர்காணல்

விண்ணப்பம் செய்யும் முறை – தபால் வழி

அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அதனுடன் கேட்கப்படும் ஆவண நகலை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம்-641046.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள் – 05.04.2024

Exit mobile version