உலகநாயகன் கமலஹாசனின் கனவு திரைப்படமான “மருதநாயகம்” 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
இப்படத்தின் கதை 80 % யூசப் கான் புத்தகத்தை தழுவியதாகும். மேலும் இதனை பிரபல எழுத்தாளர் சுஜாதா மற்றும் கமலஹாசன் இணைந்து எழுதியுள்ளனர்.
விக்ரம் பட பிரமோஷனில் பேட்டி அளித்த கமலஹாசன் மருதநாயகம் படத்தினை நான் மீண்டும் தொடருவேன். அதில் எனக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிப்பார் என்றும் கமலஹாசன் கூறியிருந்தார்.
மேலும், மருதநாயகம் படத்தின் துவக்க விழாவில் “இங்கிலாந்து ராணி எலிசபெத்” கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்பொழுது ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், மருதநாயகம் படத்திலும் கொண்டு பணிபுரிய உள்ளதாகவும், இதற்காக கமலஹாசன் அவர்கள் தற்போது ஏ ஐ தொழில் நுட்பம் குறித்து படித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.
எனினும், 1997 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் கமலஹாசனின் கனவு திரைப்படம் ஆகும். இப்படத்தினை தொடர பண பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்பொழுது கைவிடப்பட்ட இப்படம், மீண்டும் தற்பொழுது உயிர்பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.