Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதல் மாசி மாத சிறப்பு பூஜை!  ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி! 

#image_title

இன்று முதல் மாசி மாத சிறப்பு பூஜை!  ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி! 

மாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

மண்டல மற்றும் மகர விளக்கு கால பூஜைகளுக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் ஜனவரி 20ஆம் தேதி நடை சாத்தப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 12ம் தேதி திறக்கப்படுகிறது. கும்பம் மாத பூஜைக்காக இன்று மாலையில் திறக்கப்பட்டு 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். அதையடுத்து வேற பூஜைகள் ஏதும் இல்லை. தொடர்ந்து பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்  நடைபெற உள்ளது. காலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 17 ம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும்.

13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 5 மணிக்கு நெய் அபிஷேகத்தில் தொடங்கி இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும்.

வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.  17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

இன்று பிற்பகலுக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version