Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவின் இளவரசனே வருக! மதுரையில் ராகுலுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்கு அதிகமான தொகுதிகளை திமுக எதுக்கு போவதில்லை என்ற சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். பொங்கலன்று தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல் காந்திக்கு மதுரை மாவட்டத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தபடியாக ஜூன் மாதம் 23ஆம் தேதி மறுபடியும் ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் மாதம் 23ஆம் நாளன்று மேற்கு மண்டலத்திற்கு வருகைதரும் ராகுல்காந்தி, ஒரு சில இடங்களில் பிரச்சாரம் செய்வதற்குத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து 23ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வருகை தரும் ராகுல்காந்தி, அங்கு ஏற்பாடு செய்யப்படும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். .அதன்பிறகு குறு சிறு தொழில் முனைவோரை சந்தித்து பேச இருக்கிறார் ராகுல்காந்தி. இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி ஆகிய தினங்களில், கரூர் ,திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் ராகுல்காந்தி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version