Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுத்த தொலைக்காட்சி பிரபலம்!

இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், கடந்த பொங்கல் அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருக்கின்றார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் மாளவிகா மோகன். இந்த திரைப்படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய பெயரை எடுத்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். பேட்டை திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு காரணமாக, தற்போது நடிகர் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மாஸ்டர் திரைப்படம் மூலமாக அவருக்கு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்தில் சாருலதா என்ற கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசிரியையாக நடித்து இருக்கின்றார் இவர். இவருக்கு தமிழ் மொழியில் குரல் கொடுத்திருப்பவர் நடிகை ரவீனா ரவி.

தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் ரவீனா விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். அதோடு பொங்கலுக்கு வெளியான நடிகர் சிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்படத்தில் நித்திய அகர்வாலுக்கு இவரே குரல் கொடுத்ததாக சொல்கிறார்கள்.

ரவீனா ஒரு மலையாளி என்றபோதிலும், மாஸ்டர் திரைப்படத்தின் மலையாள டப்பிங்கிற்கு இவர் குரல் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் மலையாள டப்பிங்கிற்கு யார் மாளவிகாவிற்கு குரல் கொடுத்து இருக்கின்றார் என்ற ஒரு தகவல் தற்சமயம் கிடைத்திருக்கின்றது. இவரும் நடிகை தான்.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தான் மாஸ்டர் திரைப்படத்தின் மலையாள டப்பிங்கில் மாளவிகா விற்கு குரல் கொடுத்து இருக்கின்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒரு மிகப்பெரிய வெற்றி தொடராக திகழ்ந்து வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

Exit mobile version