அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்!
பீகாரில் பாஜகவுடன் ஜேடியூ கட்சி இரண்டு ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வந்தது. ஆனால் ஆரம்ப கட்டம் முதலே ஜேடியூ கட்சியில் முதல்வர் நித்திஷ் குமாருக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் அதிருப்தி இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் அவையில் ஜேடியூம் இரண்டு இடங்களைக் கேட்ட போது பாஜக தரவில்லை. இவ்வாறான செயல்கள் பாஜகவுடன் இருக்கும் கூட்டணியை கலைப்பதின் முக்கிய காரணங்கள் ஆகும். வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளின் பலத்தை எடுத்துக்கொண்டு பிரதமர் வேட்பாளருக்கு இவர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அதனின் முதல் கட்ட முடிவாக பாஜகவுடன் கூட்டணியை கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்று பாட்னாவில் ஜேடியூ எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம். அந்தக் கூட்டத்தில் பாஜாகவுடன் உள்ள கூட்டணியை முறித்து விட்டதாக நிதீஷ்குமார் கூறினார். அதுமட்டுமின்றி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டு காங்கிரஸ், ஆர் ஜே டி, போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து புதிய ஆட்சி அமைப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு பீகாரின் மொத்த இடங்கள் 243 ஆகும். அதில் இடதுசாரிகள், காங்கிரஸ் ,ஆர் ஜே டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் பாஜக இருக்கும் இடத்தை விட அதிக இடங்களை கொண்ட கட்சியாக மாறிவிடும். பீகாரில் 122 இடங்கள் இருந்தாலே சட்டசபையில் ஆட்சி அமைத்து விடலாம். தற்பொழுது ஜேடியூ இதர காட்சிகளில் இணைவதால் 160 எம்எல்ஏக்கள் ஆதரவு தர உள்ளது. சட்டசபையில் ஆட்சி அமைக்க அதிகப்படியான வாய்ப்புகள் ஜேடியூ க்கு உள்ளதாக கூறுகின்றனர்.