விஜய்யின் வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யப் போவது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை தயாரிப்பு தரப்பு நேற்று உறுதி செய்துள்ளது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. நடிகர் விஜய்யின் 66 ஆவது படமாக ‘வாரிசு’ உருவாகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். அதே போல தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
படத்தில் விஜய்யோடு மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் படம் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து இப்போது வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் உரிமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் 7ஸ்க்ரீன்ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித்குமார் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லலித்குமார் விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தயாரித்தவர். அவர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தையும் அவர்தான் தயாரிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெரிய தொகை கொடுத்து இந்த படத்தை அவர் வாங்கி ரிலீஸ் செய்வதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. இதனால் பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக அமையும்.