எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

0
134

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கத பாடல் இணையதளத்தில் வெளியாகி பரவலானக் கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் வேகமான மெட்டு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மிக மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடல் முழுவதுமே ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அதனால் சிலர் கேட்பதற்கு கொலவெறி பாடல் போல இருப்பதாக சொல்லி வருகின்றனர்.