Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாற்றத்தை நோக்கி தமிழகம்! ட்விட்டரில் இன்று இரவு 8 மணியளவில் உரையாற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

ட்விட்டர் ஸ்பேஸில் மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் இன்றிரவு எட்டு மணி அளவில் உரையாற்று உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் சமூக ஊடகத்தை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் 240 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தை தெரிவிக்க முடியும். அதோடு பதிவை மாற்றம் செய்ய முடியாது. சமூக ஊடகம் என்பதை கடந்து கருத்து பரிமாற்றத்தின் அடுத்த கட்டமாக ட்விட்டர் ஸ்பேஸ் என்ற வசதியை அந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இதில் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. அந்த விதத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார் மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற பெயரில் இன்று இரவு 8 மணி அளவில் ட்விட்டர் ஸ்பேஸில் அவர் உரையாற்ற உள்ளார்.

Exit mobile version