எந்த நாட்டிலும் இவ்வளவு விலை கிடையாது! பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக வாகன ஓட்டிகள் குமுறல்!

0
134

இந்தியாவைப் பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மற்ற நாடுகளைவிட பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்து வருவதாக வாகன ஓட்டிகள் ஆதங்கம் தெரிவித்து இருக்கிறார்கள்.அமெரிக்கா, துபாய், ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இவ்வளவு விலை விற்பது கிடையாது. ஆனால் இந்தியாவில்தான் இந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்பதை பல்வேறு தரப்பினரின் ஆதங்கமாக இருக்கிறது.

அதே சமயம் இந்தியாவைப் பொருத்தவரையில் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கொண்டு வந்தால் நிச்சயமாக விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதனை மத்திய மாநில அரசுகள் செய்வதற்கு தயங்கி வருகின்றனர்.இதனை மத்திய அரசிடம் கேட்டால் மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை அதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர இயலவில்லை என்று தெரிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நாட்டிலேயே அதிக வரியை பொதுமக்கள் கட்ட வேண்டி இருப்பது இந்த பெட்ரோல் டீசலுக்கு தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாறுதலும் செய்யாமல் இருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் , ஜூன் மாதம் முதல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகிறது மத்திய அரசு. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 17 காசுகள் உயர்ந்து 94 ரூபாய் 71 காசுக்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து 88 ரூபாய் 62 காசுகளுக்கு விற்பனை ஆகி வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.