நாள் குறித்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

0
148
MK Stalin

தமிழக சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி முடிவுற்ற நிலையில் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 29ம் தேதிவரை எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்து இருப்பதால் பல ஊடக நிறுவனங்களும் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்புகளை வெளியிடாமல் வைத்திருக்கின்றன. அதேபோல பல அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் வியூக தொகுப்பாளரின் கருத்துக்கணிப்புகளை வெளியிடாமல் வைத்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப்பின் திமுகவிற்கு அதிகளவில் பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரஷாந்த்கிஷோர் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் திமுக நிச்சயம் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலினிடமும் நாம் வெற்றி பெறுவோம் என உறுதியுடன் தெரிவித்திருக்கிறார். இதனால் வெற்றி பெற்றால் எந்த இடத்தில் பதவியேற்கலாம் என தீவிர ஆலோசனையில் இருப்பதாக சொல்கிறார்கள்.அதன்படி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க தேவையான நடவடிக்கைகள் இப்போதே தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.