செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ்

0
137
May face 4th wave from September - France

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ்

கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாகவே கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்திலுமே  இது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. மிகப் பெரும் அளவில் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர்.

அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். கொரோனா முதல் அலையில் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் பல வகையில் மக்களை துன்புறுத்தி உயிரிழப்புகளும் ஏற்படுத்தியது. நிதி நிலைமையிலும் மக்கள் அனைவரையும் அச்சுறுத்தியது அதைத் தொடர்ந்து இந்த அலையில் கொரோனா வைரஸ் வந்தவர்களுக்கு அதை தொடர்ந்து அவர்களுக்கு கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளைப்பூஞ்சை என தொடர்ந்து பல அறிகுறிகளுடன் மக்கள் நோய்வாய்ப்பட்டனர்.

கொரோனா மேலும் பல அலைகளாக பரவும் என்று அறிவியலாளர்கள் நினைப்பதால் தடுப்பூசிகள் இரண்டு டோசையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.  தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு உயிர் பற்றிய அச்சுறுத்தல் இருக்காது என்றும் சொல்கிறார்கள். தற்போது டெல்டா ப்ளஸ் என்ற புதிய வகை நோய் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இது இல்லாமல் புதுப்புது வடிவங்களில் மக்களை கொரோனா வேட்டையாடி வருகிறது.  பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை ஆரம்பித்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்தில் நான்காவது அலையாகக் உருவெடுக்கும் என அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஃபிரான்ஸில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இது நான்காவது அலைக்கு தொடக்கமாக இருக்கும் என்று அரசின் அரசியல் ஆலோசகருமான பேராசிரியர் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார். இது மிகுந்த வீரியம் மிக்கது என்றும் கூறியுள்ளார். இருந்த போதிலும் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு அது அதிக தீவிரத் தன்மையை காட்டாது. எனினும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அதற்காக பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.