Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மே மாதம் பிறந்தவர்களா நீங்கள்? அப்போ உங்க பிறவி குணத்தை பார்க்கலாமா?

Born in May Personality In Tamil

Born in May Personality In Tamil: இந்து சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு மனிதனுக்கு அவன் பிறக்கும் நேரம், காலம், கிழமை ஆகியவற்றை வைத்து குறிப்பிட்ட நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்துள்ளார் என கணிக்கப்படுவது உண்டு. அந்த பலன்கள் படி அவரின் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றிற்கு சாதகமாகவும், பாதகமாவும் உள்ள நவகிரகங்கள் என்ன என்பதை ஒரு ஜோதிடர் மூலம் நாம் கணித்து அவர் பிறப்பு முதல் இறப்பு வரை பலன்களை கூறுவது வழக்கம்.

அவ்வாறு இருக்கையில் ஒருவரின் ஜாதகத்தை வைத்து இவர் எப்படிப்பட்ட குணநலன்களை கொண்டவர் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியும். அது போல மாதங்களை வைத்து குறிப்பிட்ட மாதத்தில் பிறந்த ஒருவரின் பிறவி குணங்களையும் அவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார் என்பதையும் கூற இயலும். அந்த வகையில் மே மாதம் பிறந்தவர்ளின் பொதுவான குணநலன்களை பற்றி (May Month Born Characteristics in Tamil) இந்த பதிவில் காணலாம்.

மே மாதம் பிறந்தவர்கள்

மே மாதம் பிறந்தவர்கள் பெரும்பாலும் மற்றவர்களால் விரும்பக்கூடிய நபர்களாக இருப்பார்கள். காரணம் அவர்கள் மற்றவர்களிடம் பழகும் போது எதார்த்தமான மனிதராக இருப்பீர்கள். அதனாலேயே அனைவருக்கும் உங்களை பிடிக்கும்.

இந்த மாதத்தில் (psychological facts about may born In Tamil) பிறந்தவர்கள் சற்று கோபக்காரர்கள் தான். உங்களுடன் பழகியவர்களால் மட்டும் தான் உங்களின் கோபத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

உதவி செய்வதில் வல்லவர்கள். மே மாதத்தில் பிறந்தவர்களுடன் மற்றவர்கள் நட்பு பாராட்டினார்கள் என்றால் அவர்களை விட  அதிர்ஷ்ட சாலிகள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் உண்மையாகவும், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று தெரிந்தால் போதும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள்.

மேலும் இந்த மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு நம்பிக்கையான மனிதரை தேடி அலைய வேண்டாம். மே மாதம் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களும் இவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்கள் பொதுவாகவே வெளியில் தங்களை முழுமையாக காட்டிக்கொள்வதில்லை. மனநிலை பொறுத்து தான் இருப்பார்கள். பார்ப்பதற்கு சாந்தமாகவும், பொறுமையாகவும் காணப்படுவார்கள். இவர்கள் கலகலப்பாக பேசினால் மற்றவர்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இருந்த போதும் அனைவருக்கும் அது பிடிக்கும்.

இவர்கள் யாரிடமும் உதவி கேட்க மாட்டார்கள். கேட்பதற்கு தயங்குவார்கள்.

யாரேனும் ஒரு வேலையை கொடுத்து விட்டு இதனை முடித்து கொடுங்கள் என்று கூறிவிட்டால் அது தெரியாது என்ற போதிலும், அவர்கள் கேட்டுவிட்டார்களே என எண்ணி அதனை முயற்சித்து பார்ப்பார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு நட்பு வட்டாரங்கள் பெரிதாக அமையாது. ஒருவர், இருவர் இருந்தாலும் அவர்கள் இவருக்கு உண்மையாக இருப்பார்கள்.

மனக்கோட்டை கட்டுவது பிடிக்காது. வாழ்க்கை அழைத்து செல்லும் பாதையில் நடப்பதை ஏற்றுக்கொண்டு அதில் நல்லபடியாக வாழ வேண்டும் என நினைப்பார்கள். எதும் நடக்கும், எது நடக்காது என முன்னதாகவே முடிவு செய்து வாழ்பவர்கள் இவர்கள்.

இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய குணம் என்னவென்றால், பிடிவாதம், கோபம், மற்றவர்களிடம் குறை காண்பார்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், பிடித்தவர்கள் இவர்களை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவ்வளவு தான். அதனை இவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனை எண்ணி எண்ணி வருத்தப்படுவார்கள்.

மேலும் படிக்க:உங்களுக்கு கருநாக்கு உள்ளதா? மறந்தும் இந்த நாளில் இதை கூறிவிடாதீர்கள்..!!

Exit mobile version