Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!

நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சூரிய பகவான் என்றாலே சிவபெருமான் என கூறப்படுகிறது. சந்திரன் என்றால் சக்தி என கூறப்படுகிறது. அப்பொழுது சந்திரனும் சூரியனும் சேர்வது சிவன் சக்தி சேருவது என கூறலாம். நவகிரகங்களை நாம் வழங்குவது மூலம் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும்.

நவதானியங்கள் என்றால் நவகிரகங்களின் உணவுகள் என கூறப்படுகிறது. நம் வீட்டின் பூஜை அறையில் நவகிரகங்களின் உலோகங்கள் அனைத்துமே இருக்க வேண்டும். முதலாவதாக நம் வீட்டின் பூஜையறையில் செம்பு இருக்க வேண்டும். செம்பு என்பது சூரிய பகவானுக்குரிய உலோகம் ஆகும். அடுத்ததாக சந்திரன் இவருக்கு உரிய உலகம் வெள்ளி.

அதனையடுத்து குருபகவான் இவருடைய உலோகம் தங்கம். செவ்வாய் கிரகத்திற்கு உரியதும் செம்பு தான். அதுமட்டுமில்லாமல் பூமிக்கு அருகாமையில் செவ்வாய் கோள் இருப்பதால் மண் பாத்திரங்களையும் வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ராகு கேது கூறிய உரிய உலோகம் வெண்கலம். புதன் பகவானிற்குரியது பாதரசம் மற்றும் பித்தளை பாத்திரங்கள்.

நம் வீட்டில் நவதானியங்கள் மற்றும் நவகிரங்களுக்குரிய உலோகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு நவகிரகங்களுக்குரிய உலோகங்களை நம் வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அனைத்து நன்மைகளும் நம்மளை வந்து சேரும்.

 

Exit mobile version