Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் 1000 ரூபாய் வழங்கப்படும்? மழை வளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட குட் நியூஸ்!

கனமழையின் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா அறிவித்திருக்கிறார்.

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, கடந்த 2 தினங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக அப்போது சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பிறகு 44 சென்டிமீட்டர் மழை பெய்தது.

ஆகவே மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு மழையின் காரணமாக, பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக தமிழக முதலமைச்சர் அந்த வட்டங்களில் இருக்கின்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆகவே நாளைய தினம் முதல் ரேஷன் கடைகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் இருக்கின்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version