எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!!
தனது குழந்தை குறித்த தகவலை மறைத்ததற்காக மேயர் பதவியை இழந்தார்.
பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகரின் மேயராக இருப்பவர் ராக்கி குப்தா. முன்னாள் மாடல் அழகியான இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வழக்கமாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது எப்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று. அதேபோல் ராக்கியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அந்த பத்திரத்தில் தனக்கு இரண்டு குழந்தைகள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையில் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். பதவி ஆசையில் பொய் சொல்லி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
முனிசிபல் சட்டத்தின் விதிகளின்படி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் பொழுது 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஆனால் மூன்று குழந்தைகள் இருந்தும் பதவிக்காக ஒரு குழந்தையை ராக்கி மறைத்துள்ளார். அவரது பிரமாண பத்திரம் சரியாக முறையில் ஆய்வு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் தான் ராக்கிக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் குழந்தை ஷரியன்ஸ் (வயது 14) 2வது குழந்தை ஷிவான்ஷி (வயது 9) 3வது குழந்தை ஷரிஷ் (வயது 6).
இந்த விஷயத்தை எப்படியும் முகம் பிடித்த எதிர்க்கட்சிக்காரர்கள் பெரியதோர் விவகாரத்தை கிளப்பியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையத்திற்கு உரிய ஆதாரத்துடன் புகாரும் அளித்துள்ளனர். ஆனாலும் தனக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக எதிர்க்கட்சிகள் பிரச்சனை பெரிதாக்கிய நிலையிலும் கூட வாதம் செய்துள்ளார் ராக்கி.
இதையடுத்து பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த குற்றச்சாட்டில் ராக்கி மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சரண் மாவட்ட நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனால் பீகார் முனிசிபல் சட்டம் 2007-ன்பிரிவு 18(1)ன் கீழ் ராக்கி குப்தாவை மேயர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இப்போதைக்கு, ராக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த மேயர் பதவி காலியாகி உள்ளது.