ரஜினியை கலாய்த்த வைகோ! ரசிகர்களின் ஆத்திரத்தால் என்ன நடந்தது தெரியுமா!

0
114

இப்பொழுது திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருக்கிறது. இந்த கூட்டணியில் இருக்கின்ற சிறிய கட்சிகளை திமுகவின் சின்னமான உதயசூரியன் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முன்னரே தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், திமுகவின் தனித்தன்மையை காக்க வேண்டிய காரணத்தால், தனி சின்னத்தில் தான் நாங்கள் தேர்தலில் களமிறங்கும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு வலியுறுத்தலும் எங்களுக்கு வரவில்லை அதிமுகவின் அரசில் இருக்கின்ற ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் திமுக புகார் கொடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்படும் ஆனால் நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல ஏழு தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் எதற்காக தாமதம் செய்கிறார் என்று தெரியவில்லை. இதற்குப் பின்னால் மத்திய அரசு இருப்பதாக தோன்றுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காமல் போன காரணத்தால், யாருக்கு நல்லது அல்லது யாருக்கு பாதகம் என்பதெல்லாம் தெரிவிக்க இயலாது. 1996ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த அந்த குரல் எனக்கும் பாதிப்பை உண்டாக்கியது. என்னைப் பொறுத்தவரையில், இந்த தேர்தல் களத்தில், யாருக்கும் அவர் ஆதரவு கொடுக்க மாட்டார் என்று தெரிவித்து இருக்கிறார் வைகோ.