தமிழகத்தில் சரிந்த இறைச்சி வியாபாரம் – காரணம் என்ன?

0
114

பொதுவாக ஞாயிற்று கிழமை என்றால் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு அமலிலிருந்த போது கூட இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியது.

இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இறைச்சி கடைகளை திறப்பது கூட தடை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இறைச்சி கடைகளில் கூட்டமில்லாத காரணத்தால் வியாபரம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவல் துவங்கிய போது கோழி இறைச்சியின் மூலம் கொரோனா பரவும் என விஷம பிரசாரம் பரவிய போது இறைச்சி விற்பனை சரியத் துவங்கியது. அரசு இது குறித்து மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. ஆனாலும் எதற்கு ஆபத்து என மீன் பக்கம் மக்கள் கவனத்தை திருப்பினார்கள். ஆனால் தற்போது மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்களின் வரத்து மீன்களின் வரத்தின் குறைவினால் மீன்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் விற்பனையும் சரிந்துள்ளதாக கூறுகின்றனர்.

அதே போல் ஆட்டிறைச்சி 900 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 260 ரூபாய்க்கும் க்கும், வஞ்சிரம் மீன் 800 முதல் 900 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இறால் 240, 280, 320 என வகைக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம், கொரோனா பீதி உள்ளிட்டவை இறைச்சி வியாபாரத்தை பெரிதும் பாதித்துள்ளதாக கூறுகிறார்கள்.