சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0
130
meat shop

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இதனால், இரவு நேர உரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் விதித்து நடைமுறையில் இருந்து வருகிறது.

மற்ற நாட்களில் பகலில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மீன் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் சூழலே நிலவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சனிக்கிழமையும் மீன் இறைச்சி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தடையை மீறி மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்தால் பேரிடர் மேலான்மை விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.