Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளியன்று தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட- தமிழக அரசு.!!

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு.

வரும் நவம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், அதே நாளில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும்’.

அதேபோல், ஆடு, மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களிலும் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டும் என அறிவித்திருந்தார்‌.

இந்த நிலையில் மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி அறிவுறுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை பரிசீலித்தும் தமிழக அரசு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளை திறக்க அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது.

Exit mobile version