Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவகல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்த காதலன்..ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Dead

Dead

மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். தபஸ்வியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருவதால் அவர் விஜய்வாடாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கும் என்ஜினீயர் ஞானேஸ்வர் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம், பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் காதல் ஜோடிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால், மாணவி அவரை விட்டு பிரிந்து சென்றார்.

ஆனால், ஞானேஸ்வரன் மாணவியை தொந்தரவு செய்து வந்தார்.அவரின் தொல்லை காரணமாக அவரை அந்த ஊரை விட்டு வேறொரு கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரி செய்ய தபஸ்வியின் தோழி முடிவு செய்து இருவரையும் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.

இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறவே அந்த மாணவி வேறொருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்தார்.இதனால், ஆத்திரமடைந்த அவர் காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் ஓடி வந்தனர்.

அதற்குள்ளாகவே அதே பிளேடால் ஞானேஸ்வரன் தற்கொலைக்கு முயன்றார். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version