காதல் விவகாரத்தால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..!

0
209

முதுநிலை பிசியோதெரபி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (25). இவர் சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பிசியொதெரபி படித்து வந்தார்.அவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவதன்று அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் அறையில் சோதனையில் ஈடுப்பட்டனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்மல் குமாரின் கையில் பெண்ணின் பெயரை பச்சை குத்தி உள்ளார்? இதனால், காதல் விவகாரத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறேதெனும் காரணங்களா என்பது குறித்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல, தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே மனம் விட்டு பேசுங்கள்.உங்கள் உயிரை தவிர எதுவும் யாரும் முக்கியமில்லை. தற்கொலை தடுப்பு மையம் : 104