Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிலிப்பைன்சில் உயிரிழந்த மருத்துவ மாணவர்”- உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தை சேர்ந்தவர் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி அருவிக்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு, தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ,வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மாணவரின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version