குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!!

0
92
#image_title

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்!!!

ப்பைமேனி மூலிகை நமது தோலில் ஏற்படும் தொற்றுநோய்களை சரிசெய்து நமது சருமத்தை தங்கம்போல் ஜொலிக்க வைக்க இயற்கை அன்னை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம். பெயருக்கேற்றார்போல் செழிப்பான மக்கிய தாவரகுப்பைகளில் வளரக்கூடியது இந்த குப்பைமேனி செடி.இதன் அறிவியல் பெயர் அகாலிப்பா இண்டிகா என்பதாகும்.

தோலில் பரவும் தொற்றுநோய்களான படை, சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனைகள் களைந்து சரும ஆரோக்கியத்தை மெருகேற்றும் திறன் வாய்ந்தது குப்பைமேனி.

மருத்துவ குறிப்பு:

1.குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் போன்றவற்றுடன் சேர்த்து விழுதுபோல் அரைத்து தோல்தொற்று உள்ள இடங்களில் பூசி அரைமணிநேரம் கழித்து குளித்து வர தோல்தொற்று கூடிய விரைவில் குணமாகும்.

2.குப்பைமேனி இலைகளை தண்ணீர்சேர்க்காமல் அரைத்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.பிறகு செக்கில் அரைத்த சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இரும்பு வானலியில் மிதமான சூட்டினில் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.இந்த எண்ணெயை லேசான தோல் அரிப்பு,தேமல் உள்ள இடங்களில் இரவில் தூங்குவதற்கு முன் பூசி காலையில் குளித்துவர அந்த தோல் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

அழகு குறிப்பு:

1.இந்த எண்ணெயை வறண்ட சருமம் உள்ளவர்கள் மற்றும் முகப்பருவினால் அவதிப்படும் பதின்பருவத்தினர்கள் இரவில் பேசியல் ஆயில் போல் பயன்படுத்திவர நாளடைவில் முகம் பலிங்குபோல் மின்னும்.

குறிப்பு:சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட மருத்துவரை நாடி செல்லாமல் இயற்கை நமக்களித்த இதுபோன்ற எளிமையான தீர்வுகளைக்கொண்டு சரிசெய்துகொள்ளலாம்.