அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள மருத்துவதுவம்!!

0
169
Medicinal properties in everyday food products !!

அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள மருத்துவதுவம்!!

நோய் வந்த உடனே மருத்துமனைக்கு ஓடுவதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எளிதான முறையில் நோயினை குணப்படுத்தலாம். நம்மில் பலர் சிறிய வயதில் கட்டாயம் பாட்டி வைத்தியத்தை செய்திருபோம் தற்போது வளர்ந்து வரும் காலக்கட்டங்களின் பாட்டி வைத்தியத்தை யாரும் விரும்புவது இல்லை என்றாலும் பாட்டி வைத்தியத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது.

புடலங்காய்:

புடலங்காயை வாரத்தில் ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும் மற்றும் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இந்த எண்ணெய் நம்முடைய உடல் நலத்திற்கும், சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். இதனை உணவுகளில் சேர்த்து சமைக்கலாம்.

சாத்துக்குடி:

சாத்துக்குடி உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதில் சாத்துக்குடி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 12 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு சிறந்த பழமாகும்.

எலுமிச்சைபழம்:

எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை முகத்திற்கு போட்டால்,  நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கிவிப்பழம்:

கிவி பலத்தை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சுவாசம் குறித்த பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்பு திராட்சை விதைகள்

கருப்பு திராட்சை விதைகள் சர்க்கரை நோயாளிககள் சாப்பிடுவதால் காலில் மரத்துப்போகும் தன்மை குறையும். கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.