மருந்தாக பயன்படும் மணத்தக்காளி கீரை!!! இதன் மருத்துவ பயன்கள் என்னென்ன!!?
மணத்தக்காளி கீரையின் மருத்துவப் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கீரை வகைகளை நாம் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பல வகையான கீரைகள் இருக்கின்றது. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கீரையை சாப்பிடும் பொழுதும் உடலுக்கு ஒவ்வொரு ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல நன்மைகளை அளிக்கக் கூடியது இந்த மணத்தக்காளி கீரை ஆகும்.
மணத்தக்காளி கீரையில் உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்கள் முதல் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த மணத்தக்காளி கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
மணத்தக்காளி கீரையில் சூப் செய்து குடிக்கலாம். பொறியல் செய்து சாப்பிடலாம். குழம்பு வைத்து சாப்பிடலாம். அதே போல மணத்தக்காளியை கூட குழம்பு வைத்து சாப்பிடலாம். மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரை மூலமாக கிடைக்கும் நன்மைகள்…
* மணத்தக்காளி கீரை நமது சருமத்திற்கு நல்லது. மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடும் பொழுது நமது சருமத்திற்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
* மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
* கர்ப்பிணிப் பெண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிடும் பொழுது கருப்பையில் உள்ள கரு நன்கு வலிமையாக வளர.உதவி செய்கின்றது.
* மணத்தக்காளி கீரையை சாப்பிடும் பொழுது உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்கள் ஆறிவிடும். எடுத்துக்காட்டாக குடல் புண் போன்ற புண்கள் ஆறும்.
* மணத்தக்காளி கீரையை நாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றது.
* மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து வெளியேற்றி விடுகின்றது.
* நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனையான மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த மருந்தாக மணத்தக்காளி கீரை பயன்படுகின்றது.
* மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடும் பொழுது சிறுநீர்ப்பை எரிச்சல் பிரச்சனையை சரி செய்கின்றது.
* மணத்தக்காளி கீரையை சாப்பிடும் பொழுது நமக்கு பசி உணர்வை தூண்டி பசியை ஏற்படுத்துகின்றது.
* மணத்தக்காளி கீரையை சாப்பிடும் பொழுது வாந்தி குணமாகும்.