Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த டீ போதும்

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த டீ போதும்

இந்த காலத்தில் அனைவரும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் குறைவான இரத்த அழுத்தம் என்று பல்வேறு நோய்களால் மனிதர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். இவற்றை சரிசெய்ய மற்றும் கட்டுக்குள் கொண்டுவர அற்புதமான முறை ஒன்றை பார்க்கப் போகின்றோம்.

 

அதுதான் வெங்காயம் டீ. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல உறக்கத்தையும் தருகின்றது.

 

வெங்காய டீ செய்ய தேவையான பொருட்கள்

 

1. வெங்காயம்- 1 பொடியாக நறுக்கியது சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் ஏதேனும் ஒன்றில்.

2. பூண்டு 2 /3 பல்

3. தேன் 1 ஸ்பூன்

4. தண்ணீர் 2 கப்

5. எலுமிச்சை சாறு

6. பிரியாணி இலை அல்லது பட்டை

 

செய்முறை

1. முதலில் ஒன்றரை கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.

2. மேல் கொதிக்கும் போது பிரியாணி இலை மற்றும் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து பூண்டை ஒன்றிரண்டாக தட்டி சேர்த்துக் கொள்ளவும்.

3. நீரின் நிறம் மாறிய பின் அடுப்பை அணைத்து விடவும்.

4. சிறிது சூடு ஆறியபின் தேன் அல்லது எலுமிச்சை பழச்சாறு கலந்து குடிக்கலாம்.

5. வேண்டுமென்றால் சிறிதளவு பட்டை தூள் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

 

காலை வேளையில் குடித்து வந்தால் உடல் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் நல்ல உறக்கமும் கிடைக்கும்.

Exit mobile version