சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது
வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் மீனா நவநாகரீகமாக இருப்பதாகவும் அவரை தமிழ் பெண்ணாக ரஜினிகாந்த் மாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை என்று இன்டர்நெட்டில் கசிந்துள்ளது
இதனை உறுதி செய்வது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலைகட்டி பக்கா தமிழ் பெண்ணாக இருக்கும் மீனாவின் ஒரு புகைப்படம் வெளியானது. இதனை அடுத்து இன்று வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படத்தில் மீனா கோட் சூட் அணிந்து வெளிநாட்டு பெண் போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இதிலிருந்து நெட்டிசன்கள் யூகம் செய்த கதை சரிதான் என்று தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுதான் கதையா? என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்