குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி அதன் பின் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகை மீனா. முன்னணி நடிகையாக வலம் வந்த பொழுது பல நடிகர்களுடன் சர்ச்சையான விமர்சனங்களில் சிக்கியவர் இவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமிழில் பிரபுதேவா உடனும் மலையாளத்தில் மோகன்லால் உடனும் கன்னடத்தில் ரவிச்சந்திரனுடனும் தெலுங்கில் சுதீப் உடனும் என பலருடன் பல கிசு கிசுப்புகளுக்கு உள்ளானவர் நடிகை மீனா. இவ்வாறு பல நடிகர்களுடன் பேசப்பட்ட பொழுதிலும் தமிழில் மீனா மற்றும் பிரபுதேவா இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தது இவர்கள் இருவரையும் குறித்து அதிக அளவில் விமர்சனங்கள் வர காரணமானது.
இவர்களின் காதலானது திருமணம் வரை சென்றதாகவும் ஆனால் அதன்பின் பிரபுதேவா அவர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால் மீனா தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன்பின் பிரபுதேவா அவர்களின் வாழ்வில் நிகழ்ந்தது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பிரபுதேவா மற்றும் அவருடைய டாக்டர் மனைவி இருவருக்கும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
மேலும் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற பிரபுதேவா அவர்களின் நடன நிகழ்ச்சியில் நடிகைகள் மீனா, ரம்பா, ரோஜா, சங்கீதா மற்றும் உமா மகேஸ்வரி என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவு மீனா அவர்களின் பதிவானது மீண்டும் பிரபுதேவா மற்றும் மீனா இடையே காதல் உள்ளதா ? என்ற சந்தேகத்தை எழுப்புவதாக அமைந்திருக்கிறது.
நடிகை மீனா பதிவில் பகிர்ந்திருப்பதாவது :-
அன்பு அரவணைப்பு மற்றும் பழைய நினைவுகளுடன் ஒரு அழகான மாலை என பதிவிட்டு இருப்பது மீண்டும் மீனா மற்றும் பிரபுதேவா இடையே பழைய நினைவுகள் மலர்வதாகவும் இருவருக்கிடையில் மீண்டும் காதல் துளிர்ப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஒரு புறம் இருவருக்கிடையில் இப்பொழுது நட்பு மட்டுமே உள்ளது என விமர்சனங்கள் எழுகின்றன.